மார்ச்1: நாடாளுமன்றம் கலைப்பு!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவிப்பாரென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் தினேஷ் குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது நாட்டில் பலமான நாடாளுமன்றம் ஒன்றே அவசியமாகும்.
அதாவது கடந்த ஆட்சியாளர்கள், உருவாக்கிய சட்டத்திட்டங்களினால் முழு நாடும் குழம்பிய நிலையிலேயே உள்ளன.
இதனை ஒழுங்கமைக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது. எனவே மார்ச் 1 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.
மேலும் புதிய நாடாளுமன்றத்தின் ஊடாகவே நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments