கோத்தாவை காட்டிக்கொடுக்காமைக்கு பதவி உயர்வாம்?


கொழும்பில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்த கடற்படை அதகிhரியை கடற்படை தளபதியாக நியமிக்க கோத்தா முடிவு  செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு புறம் தாங்கள் புதிய இலங்கையை கட்டி எழுப்ப போவதாக விசமத்தனமான போலி பிரச்சாரங்களை செய்தவாறு திரைமறைவில் கடந்த மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தில் செய்தே அதே வேலைகளை உக்கிரமாக செய்து வருகிறது ராஜபக்சே குடும்பம்.

தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கப்பம் கோரி கடத்தி கொலை செய்தமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட கடற்படையின் 14 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சந்தேகநபர்களை விடுவித்துக்கொள்ள சட்டமா அதிபர் தரப்பு உயர் நீதிமன்ற நீதியரசருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

ராஜபக்சே குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன் சந்தேக நபர்களுக்கு எதிராக 678 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணைகளை செய்வதற்கு மூன்று நீதிபதிகளை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபர் தப்புதல் லிவேரா கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அதாவது 2019 நவம்பர் 13ஆம் திகதி கோரிக்கை வைத்து இருந்தார்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயா ராஜபக்சே வெற்றி பெற்ற பின்னர் ராஜபக்சே தரப்பின் ஏற்பாட்டில் சட்டமா அதிபர் நீதிமன்ற சம்பிரதாயத்தை மீறி பிரதம நீதியரசருக்கு மீண்டும் கடிதம் ஒன்றை எழுதி குறித்த வழக்கு விசாரணைக்கு 3 நீதிபதிகளை நியமிப்பதற்கு பதிலாக ஜூரி சபை ஒன்றை பெயரிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து பின்னர் அதனை மீண்டும் மாற்றுவது நீதிமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயலாகும்.

பாராளமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கிலும் ஜூரி சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டு வழக்கு நள்ளிரவு வரை விசாரணை செய்யப்பட்டு இறுதியில் கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இறுதியில் ரவிராஜ் கொலையாளிகள் எவரும் இனங் காணப்படவில்லை. அதே வேலையை தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கப்பம் கோரி கடத்தி கொலை செய்த வழக்கிலும் செய்ய முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் இந்த கடத்தல் வழக்கில் பிரதான சந்தேக நபர் நேவி சம்பத் என்கிற லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஏற்கனவே பிணையில் விடுவிக்கபட்டுள்ளார். இதே வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தேகநபரான முன்னாள் கடற்படை பேச்சாளர் D.K.P Dassanayake என்பவருக்கு நேற்று பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்சே நிருவாகம் D.K.P Dassanayake அவர்களை அடுத்த கடற்படை தளபதியாக நியமிக்க இருப்பதாகவும் சொல்லுகிறார்கள். மறுபுறம் இந்த வழக்கை விசாரித்த நீதிவான் Ranga Dissanayake அவர்களை இலங்கை இராணுவ புலனாய்வு பின் தொடர்வதாக சொல்லுகிறார்கள் . இவர் இந்த வழக்கு மட்டும் இன்றி பொதுபலசேனா தலைவரை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறை அனுப்பியவர் ஆவார். இவர் மட்டும் இன்றி கொழும்பு தலைமை நீதவான் Lanka Jayaratne அவர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சொல்லபடுகிறது

No comments