சிவாஜிக்கு பிடியாணை

நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கதிற்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான அவர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

குறித்த வழக்கு இன்று (27) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது மன்றில் ஆஜராகாதமையினால் சிவாஜிலிங்கத்தை கைது செய்யுமாறு நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.

No comments