ராஜித எம்மை கொல்ல திட்டமிட்டுள்ளார்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக வெள்ளை வான் சாரதிகள் என அறியப்படும் இருவர் குற்றப்புலனாய்வு பிரிவில் (சிஐடி) முறையிட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ராஜித சேனாரத்னவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வெள்ளை வான் சாரதிகளாக தோன்றிய இவர்கள் பல உண்மைகளை வெளிப்படுத்தினர்.

பின்னர் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சிஐடியால் கைது செய்யப்பட்ட இருவரும் ராஜித சேனாரத்னவின் நாடகத்தில் நடித்ததாக அவர் மீது குற்றம்சாட்டியிருந்தனர்.

இவர்கள் அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே இன்று (27) இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெலிக்கடை சிறையில் உள்ள கைதியின் உதவியுடன் "கொட்டஹேனா சாந்த" என்ற பெயரில் தம்மை கொலை செய்யவும் ராஜித திட்டமிட்டுள்ளார் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொட்டஹேனா சாந்த என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுத்த நபரின் குரல் பதிவுகள் அடங்கிய ஆதாரங்களும் சிஐடியில் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

No comments