சிரிய எண்ணெய் வயல்கள் ஆக்கிரமிப்பு! அமெரிக்க ரஷ்ய படைகள் இடையே மீண்டும் முறுகல்!

சிரியாவில் கடந்த எட்டு நாட்களில் நான்காவது முறையாக எண்ணெய் வயல்களை அணுக முயற்சிக்கும் ரஷ்சியப் படையினரின் வாகனத் தொடரணியை அமெரிக்கப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.

வடகிழக்கு சிரியாவில் முக்கிய எண்ணெய் வயல்களைக் கட்டுப்பாட்டில் யார் வைத்திருப்பது என்பதில் அமொிக்கப்படையினர் மற்றும் ரஷ்யப் படையினர் இடையே நிலவும் கடும் போட்டி தற்போது தீவிரமடைந்துள்ளது.

ரஷ்யப் படையினர் அல்-ஹசாகா மாகாணத்திற்கு மேற்கே உள்ள எண்ணெய் வயல்களை சென்றடைய எம் 4 நெடுஞ்சாலையை நெருங்க முற்பட்டபோது 10க்கு மேற்பட்ட கவச வாகனங்களில் நின்ற அமொிக்கப்படையினரால் ரஷ்ய வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரஷ்ய இராணுவத்தினர் தங்களில் படைத்தளத்திலிருந்து ஒரு போர் உலங்கு வானூர்த்தியை அங்கு அனுப்பியது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமொிக்க படையினரும் இரண்டு உலங்கு வானூர்த்திகளை அப்பகுதிக்கு அனுப்பியது. ரஷ்ய உலங்கு வானூர்த்தியை தரையிறக்க கட்டாயப்படுத்தியது.

பின்னர் ரஷ்ய படையினர் உலங்க வானூர்த்தியை தங்களின் படைத்தளத்திற்கு திருப்பினர்.

வடகிழக்கு அல்-ஹசாகாவில் உள்ள ருமேலான் எண்ணெய் வயல்களை ஆக்கிரமிப்பதில் அமொிக்க மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் சர்ச்சையின் மத்தியில் இந்தப் பதற்றம் நடந்துள்ளது. எண்ணெய் வயல்களை ஆக்கிரமிப்பதற்கு கடந்த எட்டு நாட்களில் இதுபோன்ற நான்கு முறை முறய்சிகள் நடந்துள்ளன.
 இது தரப்பினரிடையே மோதல்கள் எதுவும் நடைபெறாதபோதும் எண்ணெய் வயல்களை ரஷ்யா மற்றும் தீவிரவாதக் குழுக்களிடையே சென்றடையாது தடுப்பததில் அமொிக்கப் படையினர் அதனைப் பாதுகாப்தே தங்களின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கிழக்கு சிரியாவில் உள்ள டிஈயர் எல்-சோர் Deir el-Zour மாகாணத்திலும், ஈராக் எல்லைக்கு அருகிலும், வடகிழக்கில் அல்-ஹசாகாவிலும் எண்ணெய் வயல்கள் குவிந்துள்ளன.

தீவிரவாத இயங்கமான டேஷை தோற்கடிக்கும் நோக்கத்திற்காக அமொிக்கப்படையினர் ஆரம்பத்தில் சிரியாவில் நிறுத்தப்பட்டன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டேஷ் பயங்கரவாதக் குழுவிற்கு எதிரான போரில் வெற்றியை அறிவித்தார்.

2018 டிசம்பரில் அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெறும் செயல்முறையைத் தொடங்கினார். இருந்தாலும் சிரிய நாட்டில் அமெரிக்க இருப்புக்கு டேஷைத் தோற்கடிப்பதே ஒரே காரணம் எனக் கூறி டிரம்ப் நிர்வாகம் சிரியாவின் முக்கிய வருமானமான எரிபொருளைக் காணரம் காட்டி பயங்கரவாதக் குழுவிலிருந்து எண்ணெய் வயல்களைப் பாதுகாக்கவென அமொிக்கப்படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நியாயம் கூறிவருகிறது.

No comments