உண்மை எனக்கு மட்டுமே தெரியும்; சம்பந்தன் தன்னிலை விளக்கம்

அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லம் மற்றும் வாகனம் வழங்கப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று (22) கருத்து தெரிவித்தார்.
இதன்படி சம்பந்தன்,
“எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகி இரண்டு வருடங்களின் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், 2017-இல் எனக்கு மாளிகை வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியின் கீழ் வாடகைக்கு மாளிகையொன்றையும் வழங்குமாறும் பணியாளர்களையும் அமர்த்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை முன்வைத்தார்.
நான் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய மாளிகையில் தொடர்ந்தும் வசிக்க வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரியவையோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையோ அனுமதிக்குமாறு கோரவில்லை.
இதேவேளை, 2017 ஆம் ஆண்டில் மற்றுமொரு சலுகையாக எனக்கு வழங்கப்பட்ட CAT- 1094 என்ற இலக்கமுடைய பென்ஸ் ரக காரை 2019 ஜனவரி முதலாம் திகதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக என்னிடம் இருந்த அந்த காரை 2082 கிலோ மீட்டர்கள் மாத்திரமே தாம் பாவித்தேன்.
உண்மையாக என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் எனும் நிலையில், இவ்வாறான அழுக்கான சூழல் தொடரக்கூடாது – என்றார்.

No comments