சம்பந்தனின் வசதிகளை பறிக்க மாட்டோம்; ஐஸ் வைத்த தினேஷ்

சம்பந்தன் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் பதிவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்று நாடாளுமன்ற சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (22) நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்தார். மேலும்,
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அனைத்து வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் பக்கசார்பாக செயற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அனைத்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அவர்களது பதவி தொடர்பில் வழங்கப்பட்ட வசதிகளில் சாதாரண நடைமுறை பின்பற்றப்படும் எனவும் – அவர் தெரிவித்தார்.

No comments