சீனாவில் பலியெடுக்கும் மர்ம வைரஸ், உலகளவில் பரவியுள்ளது!

சீனாவில் கண்டறியப்பட்ட உயிரிழப்புக்களை ஏற்ப்படுத்தும் மர்ம வைரஸ் உலகளவில் பரவக்கூடும் என்றுஅஞ்சப்படுகிறது,

அடையாளம் காணாப்படாத , மருத்துவ சிகிச்சை கொடுக்க இயலாத இந்த வைரஸ் தாக்கத்தினால் இதுவரை குறைந்தது ஒன்பது பேர் இறந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் மத்திய சீன நகரமான ஹூபேயில் வுஹானில் தோன்றியது பின்னர் , பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட சீன நகரங்களுக்கும்,  தற்போது அமெரிக்கா., தைவான், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) புதன்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தியது, இந்த நோய் தொடர்பாக பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்க வேண்டுமா என்று தீர்மானிக்க ஜெனீவாவில் அவசர பேச்சுவார்த்தைகளை நடத்த முடிவேடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments