சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

நுவரெலியா - தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று (16) காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த காளிஸ்வரன் நந்தகுமார் (24-வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் வீசப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments