ரோஹன குறித்த மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

தனது கணவரான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீர தொடர்பான ஆள்கொணர்வு மனுக் குறித்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை இன்று (15) உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜேவிபி கலவரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் காணாமல் ஆக்கப்பட்ட ரோஹன விஜேவீரவை பொருத்தமான நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுத் தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் எடுத்த முடிவை எதிர்த்தே அவர் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

No comments