வைத்தியர் ரூமியின் பிணை நிராகரிப்பு

சிஐடியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர், வைத்தியர் ரூமி மொஹமட்டுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த 31ம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதமான விசாரணைகள் இன்று (02) இடம்பெற்றபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments