காலியில் மரக்கறிக் கொள்ளை

காலி - பத்தேகம நகரிலுள்ள கடைகளில் இலட்ச ரூபா பெறுமதியான மரக்கறிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் மரக்கறி விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் (15) இரவு இடம்பெற்ற இந்த திருட்டுச் சம்பவத்தில் 400 முதல் 500 ரூபா வரையான விலைகளில் சந்தையில் விற்கப்படும் கரட், லீக்ஸ் மற்றும் 750 முதல் 800 ரூபா வரையான விலைகளில் விற்கப்படும் பெரிய வெங்காயம் போன்ற மரக்கறிகளே திருடப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திருட்டின் மூலம் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் முறையிட்டுள்ளனர்.

No comments