சிசுவை புதைத்த தாய், தந்தைக்கு மறியல்


திருகோணமலையில் சிசு ஒன்றை புதைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் நீதிமன்ற நீதவான் விசானி தேனபது முன்னிலையில் இன்று (17) குறித்த இருவரையும் ஆஜர்படுத்திய போதே இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை, ஈச்சநகர் பகுதியில் சிசுவின் உடல் ஒன்று இறந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையிலே இச் சம்பவம் தொடர்பில் குறித்த சிசுவின் தாய் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, அவரது கணவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையிலேயே அவர்களுக்கு மறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

No comments