சற்று நேரத்தில் கைதாகிறார் ரஞ்சன்
ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய நுகேகொடை நீதிமன்றம் இன்று (14) மாலை உத்தரவிட்டுள்ளது.
பிடியாணை பெற்று ரஞ்சன் ராமநாயக்க எம்பியை கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு (சிசிடி) சட்டமா அதிபர் இன்று (14) முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.
நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட்டமைக்காக அரசியலமைப்பின் 111சி (2) பிரிவின்படி செய்யப்பட்ட குற்றங்களுக்காகவே அவரை கைது செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதன்படியே பிடியாணை பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சற்றுமுன் ரஞ்சனின் வீட்டுக்கு சிசிடி சென்றுள்ளது.
Post a Comment