கூட்டமைப்பை சந்தித்தார் அலிஸ்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைத் துணை உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை கொழும்பில் வைத்து இன்று (14) சந்தித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments