யாழில் ஏறிய பௌத்த கொடி; அகற்றியது முன்னணி

யாழ்ப்பாணம் - மத்திய பேருந்து நிலையம் முன்பாக உள்ள வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு, அதன் மீது மலர் சூட்டி கட்டப்பட்டிருந்த பௌத்த கொடி ஒன்று இன்று (14) மாலை அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இளைஞர்கள் சிலரினாலேயே குறித்த சர்ச்சைக்குரிய பௌத்த கொடி அகற்றப்பட்டுள்ளது.

இந்த பௌத்த கொடி தொடர்பில் அருகில் இருந்த கடை உரிமையாளர்கள் தெரிவிக்கையில்,  

“இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள் கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ளன. இது, நேற்று நள்ளிரவு  நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டது” என்றனர்.No comments