சுகாதார ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது

யாழ் மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் இன்றும் ( 23) தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நிரந்தர நியமனம் தர வேண்டும், சந்தைகளை தனியார் மயப்படுத்துவதை தடுக்க வேண்டும் எனக் கோரியும் யாழ் மாநகரசபை முன்பாக சுகாதார தொழிலாளர்கள் நேற்று (22) போராட்டம் ஒன்றினை ஆரம்பித்தனர்.
அத்தோடு தமது கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்புக்கள் நிறைவேற்றாது விட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதன்படி குறித்த கோரிக்கைகளை முன்வைத்து ’பதாகைகளை ஏந்திய வண்ணம் யாழ் மாநகரசபை முன்பாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments