யாழ் நகரில் கோமாதா பொங்கல்!கோமாதா பொங்கல் வழிபாடும் பேரணியும் யாழ் நகரில் இன்று மாலை இடம்பெற்றது. 

யாழ் வர்த்தகர்களின் ஏற்பாட்டில் நகரிலுள்ள ஆலயத்தில் கோமாதாக்களுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று நகரில் ஊர்வலமும் இடம்பெற்றது.

இதன் போது வந்தவழியாக அழைத்து வரப்பட்ட கோமாதாக்களுக்கு வர்த்தகர்கள் வழிபாடு செய்தனர். 

இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் 

மேலும் வர்த்தகர்கள் மத்த்தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments