காஷ்மீர் குறித்து விவாதிப்பதற்கு ஏற்றதல்ல; பாகிஸ்தானை தட்டிக்களித்த அமெரிக்கா

காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான சீனா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட முயற்சியில் இறங்கியது. நேற்று (ஜனவரி 15) பாதுகாப்பு அவை கூடியபோது சீனாவின் கோரிக்கையை பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களான 14 நாடுகளில் யாரும் ஆதரிக்கவில்லை.

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகள் வெளியே வந்து, “காஷ்மீர் பிரச்சினை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஐ.நா.வின் பாதுகாப்பு சபை உறுப்பினரான ரஷ்யாவின் தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கியும், “காஷ்மீர் ஒரு இருதரப்பு விஷயம்” என்று ஒப்புக் கொண்டார். அவர் வெளியிட்ட ட்விட்டில், " இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்கு ரஷ்யா உறுதியாக நிற்கிறது. 1972 சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 லாகூர் ஆகியவற்றின் அடிப்படையில் இருதரப்பு முயற்சிகள் மூலம் அவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியிருக்கிறார். அமெரிக்கா, “இப்பிரச்சினை இங்கே விவாதிப்பதற்கு ஏற்றதல்ல” என்று குறிப்பிட்டுள்ளது.

No comments