டெங்கால் பொலிஸ் அதிகாரி மரணம்

மன்னாரில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி பிரதேசத்தைச் சேந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பி.சீ.பியரத்தின (45-வயது) என்பவரே  இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

காய்ச்சல் என தெரிவித்து கடந்த 10ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே நேற்று  (12) மாலை  உயிரிழந்தார்.

No comments