ஆமியே வேண்டும் அம்மணியிடம் கஞ்சா!


அண்மையில் கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க பொலிஸ் வேண்டாம் இராணுவ முகாம் வேண்டும் என்று பலத்த குரல் எழுப்பிய பெண்ணின் மோட்டார் சைக்கிளிலிருந்து இரண்டு பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் நடமாடுவதாக கிடைத்த தகவலுக்கமைய விசேட அதிரடிப் படையினர் குறித்த பெண்னை பரிசோதித்துள்ளனர்.இதன்போது 2 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரத்தை சேர்ந்த மக்களது போராட்டத்தின் போது முன்னின்ற குறித்த பெண் பொலிஸ்காவல் அரண் வேண்டாம் படையினரது சோதனை சாவடியே தேவை இல்லாது விடின் போராட்டத்தை விலக்கமுடியாது என தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து படை அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளித்ததையடுத்தே போராட்டம் விலக்கப்பட்டிருந்தது.
குறித்த கோரிக்கை சர்ச்சைகளினை தோற்றுவித்திருந்த நிலையி;ல் கஞ்சாவுடன் போராட்டகாரி கைதாகியுள்ளார். 

No comments