புதிய பேருந்தை கோரி மறியல்

புதிய தரமான பேருந்தை கோரி பதுளை – மடுல்சீமை பகுதியில் இன்று (13) காலை 9 மணி முதல் பாடசாலை மாணவர்கள் உட்பட மக்கள் ஒன்றிணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பசறையிலிருந்து எகிரிய நோக்கி போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த இ.போ.ச பேருந்து அண்மையில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்திருந்ததுடன், 40 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் குறித்த பயணிகள் பேருந்திற்கு பதிலாக பிரிதொரு பேருந்து இதுவரையில் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இதனால் மடுல்சீமை, எகிரிய மற்றும் ரோபேரி ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரமான புதிய பேருந்தினை சேவையில் ஈடுபடுத்த கோரியே குறித்த மறியல் போராட்டம் இப்போதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments