மக்களோ நட்டாற்றில்:எம்பிக்களோ கோவில் வீதிகளில்?


மக்கள் யுத்த அவலங்கள் மத்தியில் தமது வாழ்வியலை கட்டியெழுப்ப பாடுபட கூட்டமைப்பினரோ அடுத்த தேர்தலிற்கான அறுவடையில் மும்முரமாகயிருக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் மக்களது ஆயிரக்கணக்கான பிரச்சினைகளை கண்டுகொள்ளாது கோவில் வீதிகளை அமைத்துக்கொடுப்பது ஏற்கனவே அம்பலமானதே.வாக்கு வங்கியினை மையமாக வைத்து ஏற்கனவே கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகரப்பகுதியிலுள்ள ஆலய வீதியொன்றை போட்டி போட்டு அமைத்துக்கொடுத்ததும் பின்னர் முடடி மோதி திறந்து வைத்திருந்ததும் தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தனது விசேட நிதி ஒதுக்கீடான சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாவில் அமைக்கப்பட்ட ஏழாலை மத்தி புவனேஸ்வரி அம்மன் வீதியினை மக்களிடம் நாடாவெட்டி கையளிக்கும் வரலாற்று நிகழ்வு இன்று இடம்பெற்றது.

No comments