திண்டாடும் மந்திகை வைத்தியசாலை நிர்வாகம்?


வடமராட்சியிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த மந்திகை ஆதார வைத்தியசாலை நிர்வாக குழறுபடிகளால் திண்டாடிவருகின்றது.

இன்று வைத்தியசாலை சூழலில் மின்தடை ஏற்பட்டநிலையில் , மின் பிறப்பாக்கி உதவியுடன் வைத்திய சாலையின் செயல்பாடுகள் வழமைபோன்று இடம்பெறவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மின் பிறப்பாக்கி சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இயங்கவில்லை என்றும் இதனால் மந்திகை ஆதாரவைத்தியசாலையின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கிப்போயிருந்தன என தெரிவிக்கப்படுகின்றது.

சத்திரசிகிச்சைகள் அனைத்தும் அரைகுறையாக முடங்கிய நிலையில் , சத்திரசிகிச்சைக்காக மயக்கமருந்து ஏற்றபட்டவர்கள், ஸ்கேன் போன்றவற்றுக்காக தயார் நிலையில் இருந்தவர்கள் நோயாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்படவேண்டியிருந்ததாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சத்திரசிகிச்சைக்கு பொறுப்பாக இருந்த வைத்தியர் மின்பிறப்பாக்கிக்கு பொறுப்பானவர்களை அவசரமாக தொடர்பு கொண்டபொழுதும் அவர்கள் அசண்டையீனமாக இருந்ததாகவும் , இது போன்ற பிரச்சினைகளுக்கு தயார் நிலையில் இல்லாதிருந்ததாகவும் நோயாளர்கள் தெரிவித்தனர்.

முனித உயிர்களுடன் மீண்டும் மீண்டும் விளையாடும் வைத்தியசாலை நிர்வாகத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாதிருப்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments