ஓஎம்பி வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

காணாமல் போன ஆட்கள் பற்றிய சட்டத்தை அரசு மீள்பரிசீலிக்க உள்ளது என அறியப்படும் நிலையில் அது குறித்து காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் இன்று (15) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி தாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் அது பற்றி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள அலுவலகம் மேலும்,
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் எந்தவொரு குறித்த வலயத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ என வரையறுக்கப்படவில்லை.
எனவே காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் மற்றும் தம்முடன் பணியாற்றும் நிறுவனங்களினதும் பரந்த ஆலோசனைகளை பின்பற்றியதாகவே பிரேரிக்கப்படவுள்ள சட்டத்திற்கான திருத்தங்கள் அமைந்திருக்க
வேண்டும்- என்றும் தெரிவித்துள்ளது.

No comments