தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் உதாசினம்

முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்களை நீக்க வேண்டும் என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரரினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது தொடர்ந்தும் எமது முஸ்லிம் சமுகத்தினை உதாசீனம் செய்வதனையே காண்பிக்கின்றது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரத்னதேரர், விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

No comments