நித்திரையில் வடக்கு தெற்கு ஏகத்திற்கு போட்டி?வடமாகாணசபை அமர்வில் நித்திரை தூங்கி வழிந்து தமிழ் அரசியல் தலைவர்கள் தமது திறமைகளை காண்பித்திருந்த நிலையில் அவர்களிற்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லையென தென்னிலங்கை அரசியல்வாதிகளும் காண்பித்துள்ளனர்.


2020ம் ஆண்டில் அதிசயங்கள் நடப்பதாக கோத்தபாய சொல்ல அவரது பொதுஜனபெரமுன ஆட்சியிலுள்ள உள்ளுராட்சி மன்றமொன்றின் புத்தாண்டின் முதலாவது சிறப்பு கூட்டத்தில் நித்திரையிலும் கைத்தொலைபேசி வசமும் மும்முரமாக இருந்த அரசியல் உறுப்பினர்களது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே வடமாகாணசபையில் ஆழ அமர நித்திரையிலிருந்த அரசியல் தலைவர்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளது விமர்சனங்களிற்குள்ளாகினர்.

தற்போதும் இத்தகைய படங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.  

No comments