யாழில் முதியவர் சடலமானார்; பெண் கைது

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளது.
வீதியில் கைவிடப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொது மக்கள் குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்ள நிலையில், இது கொலையாக இருக்கலாம் என அங்கிருந்த பொது மக்கள் கூறியுள்ளனா்.
66 வயதுடைய ஆலய பூசகர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments