மனைவியை வெட்டி கொன்ற கணவன்; கிளியில் பயங்கரம்

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக பிரிவு, மயில்வாகனபுரத்தில் தனது இளம் மனைவியை வெட்டிக் கொன்ற நபர் ஒருவர், தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இன்று (25) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது சுகந்தன் சகுந்தலா (வயது-25) என்ற பெண் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
அத்தோடு குறித்த நபர் தன்னைத் தானே கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண்ணின் சகோதரியும் வெட்டுக் காயத்துக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments