பல்டியடித்தார் ஜனாதிபதி

காணாமல் ஆக்கப்பட்ட 20 ஆயிரம் பேர் மரணித்துவிட்டதாக ஜனாதிபதி கூறியதாக ஊடகங்கள் தவறாக அறிக்கையிட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐநா தூதுவர் ஹானா சிங்கருடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,

காணாமல் போனவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. இதனால் காணாமல் போனோர் கதியை அவர்களது குடும்பங்கள் அறியவில்லை. பலர் புலிகளினால் பலவந்தமாக பிடித்து செல்லப்பட்டார்கள்.

விசாரணைகளின் பின்னர் மரணச் சான்றிதழ் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வை மறுசீரமைக்க ஆதரவு வழங்கப்படும்” தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தில் “காணாமல் போனோர் மரணமடைந்துவிட்டர்” என ஜனாதிபதி குறிப்பிட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments