ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு! 6 பேர் பலி!

ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான ரோட் ஆம் சீவில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் இறந்துள்ளனர். மேலும்

இரண்டு பேர் காயமடைந்தனர் எனக் காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 36, 65, 69 வயதுடைய மூன்று ஆண்களும், 36, 56, 62 வயதுடைய மூன்று பெண்களும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் துப்பாக்கிதாரியின் தாயும் தந்தையும் அடங்குவர்.

துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கின்றார். .

வெள்ளிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் நகரின் பிரதான தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில், துப்பாக்கிச் சூடு நடந்தத்தப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர்களில் சிலர் தொடருந்து நிலையத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மற்றவர்கள் அருகிலுள்ள வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

26 வயதுடைய சந்தேச நபர் துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டார். அவரிடம் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments