காணாமல் போனோர் அலுவலகத்தை எதிர்த்தது தவறு சுமந்திரன் மீண்டும் வியாக்கியானம்


ஏதுமே செய்ய முடியாது முடங்கிப்போயுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை தமிழ் மக்கள் எதிர்த்தது தவறென சுமந்திரன் மீண்டும் வியாக்கியானம் செய்ய தொடங்கியுள்ளார்.ஆட்சி மாற்றத்தின் பின்னர் எந்நேரமும் இழுத்து மூடப்படலாமென எதிர்பார்க்கப்படும் குறித்த அலுவலகத்தை நியாயப்படுத்தி கொழும்பு வானொலிக்கு அவர் செவ்வியளித்துள்ளார்.

இதனை கேள்விக்குள்ளாக்கியுள்ள சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மகிந்த ராஜபக்சே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சிகளுடன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் , தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்கள் என எவரையும் விசாரிக்கும் அதிகாரத்தை கொண்டு இருந்ததா ?

OMP இற்கு எந்தவொரு நீதிமன்ற அதிகாரமும் இல்லை. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு OMP யினால் கண்டு பிடிக்கப்படும் எந்தவொரு விடயமும் குற்றவியல் அல்லது சிவில் சட்ட மீறல் சம்பந்தமான குற்றத்திற்கு வழிவகுக்காது என்கிற நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த அடிப்படையில் OMP ஐ ஏற்று கொண்டு இருக்க வேண்டும் என திரு சுமந்திரன் எதிர் பார்க்கிறார் ?

 OMP அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட ஏழு ஆணையாளர்களுள் ஒருவராக மேஜர் ஜெனரல் பதவி நிலைக்குரிய இராணுவ அதிகாரி ஒருவரும் இதில் உள்ளடக்கப்பட்டு இருந்தார் .இந்த அதிகாரி தான் இறுதி யுத்த களத்தில் ராணுவத்திற்க்கான சட்ட அதிகாரியாக தொழில்பட்டதோடு ஜெனீவா அமர்வுகளில் அரசாங்கம் சார்பாக கலந்து கொண்டு போர்க்குற்றங்களுக்கு எதிராக பேசி வந்தவர். இந்த நிலையில் எந்த அடிப்படையில் இந்த மீது அப்பாவி மக்கள் OMP மீது நம்பிக்கை வைத்து இருக்கமுடியும் ?

இவ் OMP அமர்வுகள் நடைபெற்ற அதே வேளையில் காணமால் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மரணச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை UNP அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது ஏன் ? இதன் பின்னணி என்ன ? காணாமல் போனோரை கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் மறுபுறம் மரண சான்றிதழ் வழங்க UNP அரசாங்கம் முற்பட்ட பொது பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்க்க தான் செய்வார்கள்

 OMP அமர்வுகளை நடத்தும் போது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைப் பற்றியே கூடுதல் கரிசனை காட்டினார் அன்றி காணாமல் போகச் செய்யப்பட்டவர்களைத் தேடுவதில் அவர்கள் கவனம் இல்லை என்பதை அவர்கள் இந்த அமர்வுகளில் சாட்சியமளிக்க வருவோரிடம் கேட்கும் கேள்விகள் அமைந்து இருந்தன என்பதை திரு சுமந்திரன் மறுப்பாரா ?

 OMP இற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணர்களில் ஒருவர் இலங்கை அரசாங்கத்தினால் தனது சர்வதேச பிரச்சாரத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு சம காலத்தில் நியமிக்கப்பட்டவர் எனும் பொது இன் சுயாதீன தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது சரி தானே ?

அரசாங்கம் OMP அலுவலகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடுகளை கூட செய்வதில்லை என ஏற்று கொள்ளும் சுமந்திரன் அதற்க்கு அரசாங்க அதிகாரிகள் மீது பழி போடுகிறார் . அமைச்சர்கள் இதற்க்கு காரணம் இல்லை என்கிறார் . ஆட்சியில் ஜனாதிபதி , UNP அமைச்சர்கள் , அமைச்சரவை இற்கு மேலாக அதிகாரிகள் சக்தி மிக்கவர்களாக இருந்தார்களா ?

சக்தி மிக்கதாக காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் வகையில் உளப்பூர்வமான விருப்பத்தோடு OMP அமைக்க பட்டு இருந்தால் ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது . ஒட்டுக்குழுக்கள் மீண்டும் அதிகாரம் செலுத்தும் நிலைக்கு வந்து இருக்க முடியாது . பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்து இருக்கும். இன்றைக்கு ராஜபக்சே சகோதரர்கள் மீண்டு வந்திருப்பதற்கு முதல் காரணம் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசாங்கம் தான் .

நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி இன்றைக்கும் வீதிகளில் அலைய வைத்த வேலையை செய்ததும் நல்லாட்சி அரசாங்கம் தான் .

No comments