போராட்டகளத்தில் மீண்டும் வேலையற்ற பட்டதாரிகள்?


நேற்றைய தினம் நாடாளுமன்றில் இலங்கை ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பாக எந்த அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.இதனை தொடர்ந்து வீதியில் இறங்குவதை தவிர நமக்கு வேற வழியில்லை எனவே நாடு முழுவதிலுமுள்ள மாவட்ட செயலகங்களை முடக்கி அறவழி போராட்டத்திற்கு பட்டதாரிகளை பட்டதாரிகள் சங்கங்கள் வழிநடத்துவோமென வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பு அறிவித்துள்ளது. 

இதனிடையே நாடாளுமன்றத்தில் அதிகபடியான ஆதரவு இல்லாமல் வேலைவாய்ப்புகள் வழங்குவதென்பது கேள்விக்குறியான விடயம்.அந்தவகையில் ஜனாதிபதியை எதிர்ப்பதாகவே இவ்வகையான போராட்டம் அமையும் என இன்னொரு தரப்பார் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளனர்.

முன்னதான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகளிற்கு வேலை வாய்ப்பென அறிவித்திருந்த கோத்தபாய தற்போது நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து ஒரு இலட்சம் இளைஞர்களிற்கு வேலை வாய்ப்பென அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments