ஈபிடிபி வளர்கின்றது:பொறாமையென்கிறது கட்சி!


வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க இணைப்பாளர் ராஜ்குமார் தாக்கப்பட்டமை வவுனியாவில் எமக்கு கிடைத்துள்ள ஆதரவினை பொறுத்துக்கொள்ள முடியாத போலிவேசம் போடும் சில அரசியற்கட்சியை சேர்ந்தவர்கள் எமது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியென ஈபிடிபி விளக்கமளித்துள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் மக்களுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட பணத்தினை ஏப்பம் விட்டு தங்களது கட்சியாலேயே பதவியில் இருந்து துரத்தப்பட்டவர்களும், அரசால் கிடைக்கப்பெற்ற ஆதரவு காலத்தில் மக்கள் நலனை கருத்திற்கொள்ளாது தங்களது சுயலாபத்தை மட்டுமே கருத்திற் கொண்டவர்களும் எம்மை விமர்சிக்கினறனர்.

இறுதி யுத்தநேரம் இந்தியாவில் சொகுசு அறை எடுத்து தங்கி நின்று வேடிக்கை பார்த்தவர்களும் இன்று நீலக்கண்ணீர் வடிக்கின்றனர்.

சில ஸ்டாண்ட் இல்லாத கட்சிகள், சிலரை தூண்டிவிட்டு பொய் அறிக்கைகளையும், நாகரீகமற்ற செயற்பாடுகள் மூலமும் எமக்கு இழிவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்நிலை தொடருமானால் ஜனநாயக ரீதியில் எமது எதிர்ப்பையும் காட்ட நேரிடும். அதே நேரம் சிலரின் முகத்திரையும் கிழிக்கப்படுமெனவும் ஈபிடிபி வவுனியா பொறுப்பாளரென தெரிவித்துக்கொள்ளும் திலீபன் எனும் நபர் அறிவித்துள்ளார்.

இணைப்பாளர் ராஜ்குமார் மீது தாக்குதலை குறித்த திலீபனே முன்னின்று நடத்தியதாக சொல்லப்படுகின்றது.

No comments