கத்திக்குத்து!! இளைஞனை சுட்டுக்கொன்ற காவல்துறையினர்

பாரிசிலிருந்து தெற்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வீல்யுஇவ் (Villejuif) நகரில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய இளைஞரைப் பிரெஞ்சுக்
காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்டவர் 22 வயதுடைய நேத்தன் சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பூங்கா ஒன்றினுள் நடமாடியவர்களை கத்தியால் குத்தியும் வெட்டியும் தாக்கியுள்ளார். இத்தாக்குதல் 62 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் காயமடைந்தனர்.

கத்திக் குத்துத் தாக்குதலை நடத்தியவர் மனநலக்குறைபாடு உடையவர் எனவும் அவருக்கும் பயங்கரவாத சித்தாத்தங்களுடன் செயற்பட்டவர்கள் என்பதற்கு எதுவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேத்தன் சியின் பைக்குள் சமயம் சார்ந்த சில குறிப்புகள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments