கோத்தா:ஆபாச படங்கள் வைத்திருப்பது சமூகவிரோதம்?


துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆபாச படங்களுடன் ஐ.தே.க எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின்  வீட்டை தேடுதல் ஆணையுடன் பொலிஸார் இன்று காலை சோதனை செய்துள்ளனர்.

தேடுதல் குறித்த செய்தியை ரஞ்சன் ராமநாயக்க தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில் அதில், பொலிஸார் இப்போது ஒரு தேடுதல் ஆணையுடன் எனது வீட்டை சோதனை செய்தார்கள், அந்த ஆணையில் தேடுதலுக்கான காரணம்  எதுவும்  குறிப்பிடப்படவில்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை, ஆனால் நான் கைது செய்யப்பட்டால் நான் மருத்துவமனைக்கு அல்ல சிறைக்குச் செல்வேன். நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், உண்மையை பேசுவதற்கான எந்தவொரு எதிர்விளைவையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆபாச படங்களுடன் ஐ.தே.க எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

No comments