அடங்க மறுத்த சம்பிக்க?


சிம்மாசன உரை நிகழ்த்துவதற்கு பாராளுமன்றத்துக்குள் வருகை தந்த ஜனாதிபதிக்கு அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் தெரிவித்த போது முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மாத்திரம் தனது இரு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு எழுந்து நின்றமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது சிம்மாசன உரையை நிகழ்த்தி விட்டு பாராளுமன்றத்தை விட்டும் வெளியே செல்லும் போது ஜனாதிபதி சகல எம்.பி.க்களுக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் வணக்கம் செலுத்திய எம்.பி.க்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மாத்திரம் தனது கைகளை பின்னால் கட்டிக் கொண்டு எழுந்து நின்றதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்பொழுது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்னவும் நேற்றைய தினம் பாராளுமன்றத்துக்கு சமூகமளித்திருக்க வில்லையென கூறப்படுகின்றது. 

No comments