வட.கிழக்கில் காணாமல் போன சிறார்கள் மீட்பு?


வடமராட்சி கிழக்கில் காணாமல்; போன சிறுவர்கள் மூவரும் ஆலய மடமொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர், வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களே நேற்றைய தினம் காணாமல்போயிருந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், அச்சமான நிலை காணப்படுகிறது.

பத்து வயதைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் மற்றும் 17 வயதுடைய ஒருவருமாக மூன்று பேர் நேற்று (18) மாலை வேளையில் இருந்து காணாமல் போயிருந்தனர். 

குறித்த சிறுவர்கள் நேற்று இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து ஊர் மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஊரின் பல இடங்களிலும் தேடியும் மூவரும் கிடைக்கவில்லை.

காவல்துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து இன்று காலை வரை தேடுதல் நடத்தியதையடுத்து கலியுகமூர்த்தி மதுசன் (10 வயது),புஸ்பகுமார் செல்வகுமார்(10 வயது),சந்தியோ தனுசன் (17 வயது) ஆகிய மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள சிறு ஆலயமொன்றில் விளையாடிய பின்னர் ஆலய மடத்தில் படுத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

தாயாரை இழந்த மற்றும் விசேட தேவையுடைய சிறார்களே காணாமல் போய் மீட்கப்பட்டுள்ளனர். 

No comments