மின்வெட்டு அமுலாகுமா? பதிலளித்தார் மஹிந்த

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நாட்டில் மின்வெட்டு அமல்படுத்தப்படாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மாதம் முதல் மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகிய நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றநிலை தனிந்துள்ள நிலையில் மின் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments