ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு:பிசுபிசுத்தது கோத்தா கனவு?கோத்தபாயவின் நாடாளுமன்ற தேர்தல் வியூகமான ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்படும்போதும் தேர்தல் வரையில் நியமனம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரியவந்துள்ளது.

நாடு பூராகவும் உள்ள கல்வி அறிவு குறைந்த ஒரு லட்சம் இளைஞர்களிற்கு வேலை வாய்ப்பு என்னும் பெயரில் தற்போது நாடு பூராகவும் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக விபரம் திரட்டப்பட்டு அடுத்த மாதம் நேர்முகத் தேர்வு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு அதிகாரியொருவர்  பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 350 பேர் விகிதம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும. அறிவிக்கப்பட்டு பிரதேச செயலகங்கள் மட்டுமன்றி கட்சி அலுவலகங்களிலும் மிகவும் வேகமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் இவ்வாறு விபரங்களை பெறுவது தேர்தல் நடவடிக்கைகளிற்கு மட்டுமே உதவுமெனவும் தேர்தல் வரையில் எந்த நியமனத்திற்கும் சந்தர்ப்பமே இல்லை என தற்போது தெரியவந்துள்ளது.

குறித்த நியமனத்திற்கான திறைசேரி அனுமதியானது இதுவரை பெறப்படவில்லை என்பதோடு அனுமதிக்கான விண்ணப்பமும் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதேநேரம் ஒரு லட்சம் பேர் நியமிக்கப்பட்டு முதல் 6 மாத காலத்திற்கு 22 ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு நியமித்தால் மாதம் ஒன்றிற்கு 220 கோடி ரூபா பணம் தேவை ஏற்படும். தற்போதைய சூழலில் கடந்த ஆண்டுவரை இடம்பெற்ற பணிகளிற்கான கொடுப்பனவே வழங்காத சூழலில் இந்தளவு மிகப்பெரும் தொகை பணம் ஒதுக்கீடு செய்வதற்கான சந்தர்ப்பமே கிடையாது என்பதனால் நியமனத்திற்கான சந்தர்ப்பமும் இல்லை எனத் தேர்தல் ஆணைக்குழு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

No comments