கருவை சந்தித்தார் சட்டமா அதிபர்

ரஞ்சன் ராமநாயக்க எம்பியின் தொலைபேசி குரல் பதிவுகளில் தொடர்புடைய நீதிபதி ஜிஹான் பிலப்பிட்டியவின் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்றைய (28) தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அரசியலமைப்பு சபையின் கலந்துரையாடலில் அடிப்படையிலேயே அவர் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

பின்னணி -

ரஞ்சன் ராமநாயக்க உடன் உரையாடிய குரல் பதிவு வெளியாகி சர்ச்சையில் சிக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலபிட்டியவை பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கடந்த (23) அறிவுறுத்தியிருந்தார்.

ரஞ்சன் ராமநாயக்க உடன் இணைந்து போலியான ஆதாரங்களை தயாரித்து சாதி செய்த குற்றச்சாட்டிலேயே அவரை கைது செய்யுமாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு (சிசிடி) சட்டமா அதிபர் இந்த அறிவுறுத்தலை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments