சிஐடி விசாரணையில் ரணில்

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் (சிஐடி) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது.

இதன்போது ரணிலின் வீட்டிற்கு சென்ற விசாரணைக் குழு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகளை அவர் அறிந்திருந்தாரா என்பது பற்றியே வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த ஆட்சியில் தான் பிரதமராக பதவி வகித்தாலும் முக்கியமான பாதுகாப்பு கூட்டங்களில் தான் பங்குகொள்ளவில்லை எனவும், மைத்திரிபால சிறிசேனவே அவற்றை நேரடியாக கையாண்டார் என்றும் இந்த விசாரணைகளின்போது ரணில் தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments