ரஞ்சனுடன் பேசிய நீதிபதிக்கு கோத்தா கொடுத்த அதிர்ச்சி

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவுகளில் தொடர்புபட்டுள்ள மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தம்மிக்க ஹேமபால சேவையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று (16) ரஞ்சனின் குரல் பதிவுகளில் தொடர்புபட்டுள்ள மூன்று நீதிபதிகளிடம் தாமதமின்றி வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு (சிசிடி) சட்டமா அதிபரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments