சளைக்காது படம் காட்டும் கோத்தா?


கோத்தபாய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சென்றதை சிங்கள ஊடகங்கள் கொண்டாடுகையில் பில்லியன்களில் இலங்கை விமான சேவை நட்டமடைய மகிந்த குடும்பம் எவ்வாறு காரணமானதென்பது அம்பலமாகியுள்ளது.

பொது சேவை நிறுவனங்களுக்கான பாராளமன்ற தெரிவு குழு (கோப்) அறிக்கையின் படி இலங்கையில் மோசமாக நட்டத்தில் இயங்கும் 3 வினைத்திறனற்ற நிறுவனங்களில் இலங்கை விமான சேவைகள் மற்றும் அது சார்ந்த இலங்கை விமான சேவைகள் முதன்மையானது. 2009 தொடக்கம் 2019 ஆண்டு வரையான 10 ஆண்டுகளில் விமான சேவைகள் நிறுவனங்களில் மொத்த நட்டம் 240 பில்லியன் ஆக இருக்கிறது. இதில் தொழிற்பாடு சார் நாட்டம் (Operational Loss) மட்டும் 116 மில்லியன் ஆக இருக்கிறது. விமான சேவைகள் நிறுவனத்தின் மொத்த சொத்துக்களை விட அதன் கடன் 177 பில்லியன் ரூபா அதிகம் என இலங்கை கணக்காய்வாளர் நாயக அறிக்கை சொல்லுகிறது.

இலங்கை விமான சேவைகள் நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்கா டாலருக்கும் அதிகமான நட்டத்தை எதிர் கொள்ளும் அதே காலத்தில் வியாபார திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு மட்டும் 247.1 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் SEIRA என்கிற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது .

கடந்த மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தில் அவர் மனைவியின் சகோதரர் விமான சேவைகள் நிறுவனத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டது தொடக்கம் கோத்தபாயா ராஜபக்சே மனைவிக்கு தேவையான நாய் குட்டியை பெற்று கொள்ளுவதற்கு விமானங்களை இயக்கியது வரை பலவேறு பட்ட வினைத்திறனற்ற வேலைகளை இலங்கை விமான சேவைகள் நிறுவனம் செய்து இருக்கிறது.

நிதித்துறை சார்ந்த அதிகாரிகளை பொறுத்தவரை இலங்கை விமான சேவை சார்த்த நிறுவனங்களின் தோல்விக்கு அரசியல் தலையீடுகள், அதிகார துஷ்ப்பிரயோகம், வினைத்திறனற்ற நிருவாகம்/ முகாமைத்துவம் , தவறான வியாபார திட்டங்கள் , ஊழல் என எண்ணற்ற காரணிகளை வரிசைப்படுத்துகிறார்கள்.

இலங்கை விமான சேவைகள் மோசமாக இயங்கி வரும் இந்த நாட்களில் பதவிக்கு வந்து இருக்கும் கோத்தபாயா ராஜபக்சே நிருவாகம் பின்வரும் பணிகளை செய்து இருக்கிறது
1. மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) Thilak Weerasinghe மற்றும் யோசித்த ராஜபக்சே அவர்களின் மனைவியின் தாய் (Mother in law) Diedre De Livera ஆகியோர் Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவன இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்
2. விமான நிலையங்கள், மற்றும் அதன் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவு (aviation regulatory knowledge), விமானச் சட்டங்கள் பற்றிய தெளிவு (aviation laws), தீவிர நிர்வாக திறன்கள் (serious managerial skills) என அந்த பின்னணியும் அற்ற ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி சந்திசிறி அவர்களை Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவன தலைவராக நியமித்து இருக்கிறது
3. அமெரிக்காவைச் சேர்ந்த கோட்டபய ராஜபக்ஷாவின் தனிப்பட்ட பயண முகவர் (Travel Agent) உபுல் தர்மதாசா இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (Sri Lanka Civil Aviation Authority) புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் .
4. Sri Lankan Airlines நிறுவனத்தின் Cashier ஆக இருந்த அமித் விஜேசிங்க என்பவர் , இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் முகாமையாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்
5.Softlogic நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே இப்போது Sri Lankan Airlines இன் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்

ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு தகுதியான அனுபவமிக்க வினைத்திறனான தலைமைத்துவம மிக அவசியம் . இலங்கை விமானசேவைகள் நிறுவனங்களின் தோல்விக்கு அரசியல் பின்புலமுள்ள வினைத்திறனற்ற முகாமைத்துவம் மிக பிரதான காரணம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். இங்கே கோத்தபாயா ராஜபக்சே நிருவாகம் கூட தங்களின் அரசியல்/ குடும்ப விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தகுதியற்ற / வினைத்திறனற்ற முகாமைத்துவம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது
மறுபுறம் பத்திரிகையாளர்கள் சகிதம் கண்காணிப்பு பயணம் செய்வதாக கோட்டாபய நிருவாகம் படம் காட்டுகிறது . சம்பந்தபட்ட துறை சார் அதிகாரிகள் இல்லாமல் வெறும் பத்திரிகையாளர்கள் சகிதம் நடத்தும் கண்காணிப்பு பயனனங்களால் என்ன பயன் ? ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் வாக்கு பெற இது உதவுமே தவிர விமான சேவைகள் நிறுவனத்தின் நிலையான அபிவிருத்திக்கு இந்த பயணங்கள் பயன் தராது

No comments