எட்டாப்பழம் புளிக்கும்:தலைமை வேண்டாம்?


யாழ்ப்பாணத்தில் அரசியல் விவாத நிகழ்வொன்றில் கூட்டமைப்பின் தலைமையினை ஏற்கும் எண்ணம் தற்போதைக்கு தனக்கு இல்லையென அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரச ஆதரவு ஊடகமொன்றின் அரசியல் நிகழ்வில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கூட்டமைப்பிற்குள் தலைமைத்துவ பிரச்சனை இல்லை. அவ்வாறாக அடுத்த தலைமைத்துவம் தொடர்பான சந்தர்ப்பம் எழுமாயின் மாவை சேனாதிராசாவே தலைவராக பொருத்தமானவராக இருப்பார். கூட்டுத் தலைமைத்துவம் அவசியமற்றதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வட மாகாண அவைத்தலைவருமான சீவீ.கே.சிவானம் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

No comments