ஈரான் நடத்திய தாக்குதலில் 11 அமொிக்கப் படையினர் காயம்! வெளியானது புதிய தகவல்!

ஈராக்கில் அமைந்துள்ள அமொிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் 11 அமொிக்கப் படையினர் காயமடைந்துள்ளனர் எனப்
புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமொிக்கப் படை அதிகாரியை மேற்கோள்காட்டியே இத்தவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக்கிலிருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெறும் சண்டையில் பல அமொிக்கப் படையினர் காயமடைந்துள்ளாக அமொிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குண்டு வெடிப்பில் அதிர்ச்சியடைந்து பல அமொிக்கப் படையினர் யேர்மனி நாட்டுக்கு அழைந்துச் செல்லப்பட்டு சிகிற்சை வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் சிகிற்சைகள் முடிவடைந்து உடற்தகுதி பெற்றதும் மீண்டும் ஈராக் நாட்டுக்குப் பணிக்காக அவர்கள் திரும்புவார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments