சஜித் தலைமையில் புதிய கூட்டு!


சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணி அமையவுள்ளது.

ஐதேக தலைமையிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக மறுத்துள்ள நிலையில், அடுத்த கட்ட நகர்வு தொடர்பில், ஐக்கிய தேசிய முன்னணியின் விசேட கூட்டம் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில்; நடைபெற்று வருவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜக்கிய தேசிய முன்னணியின் பிரதான கட்சியான ஜதேக தலைமையினை இளம் தலைமுறைக்கு விட்டுக்கொடுக்க பங்காளிகள் கோரிவருகின்ற போதும் ரணில் உள்ளிட்ட சில தரப்புக்கள் மறுத்துவருகின்றன.

இந்நிலையிலேயே சஜித் தலைமையில் புதிய கூட்டணிக்கு இன்று தீர்மானிக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது.

No comments