மெல்பேர்னில் பொக்கட்டில் கைவரிசை காட்டிய இலங்கையர் ஐவர் கைது

அவுஸ்திரேலியா - மெல்பேர்ன் நகரில் பிரபல வர்த்தக நிலையங்கள், புகையிரதம் மற்றும் ட்ராம் நெட்வேர்க் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி (பிட்பெகாக்கட்) கொள்ளையில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் உட்பட 7 பேர் மெல்பேர்ன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஏழு பேரில் பெண் ஒருவர் உள்ளிட்ட இரு இந்தியர்களும், இரண்டு பெண்கள் உட்பட இலங்கையை சேர்ந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் ஏழு பேருக்கும் ஏப்ரல் 14ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, பிணை வழங்கப்பட்டுள்ளது.

No comments