அமொிக்காவுக்கு விரைவில் பதிலடி வழங்கப்படும் எச்சரிக்கும் ஈரான்

எங்களுடைய பரம எதிரியான அமொிக்காவுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை ஈரான்
நாட்டின் தலைவர் அயத்துல்லா கொமையும் மற்றும் அந்நாட்டு அதிபர் ஹசான் ரௌகானியும் விடுத்துள்ளனர்.

இன்றைய தினம் ஈராக் வானூர்த்தி நிலையத்தில் வைத்து ஈரான் நாட்டின் இராணுவத் தளபதியை ஆளில்லா வானூர்தி மூலம் அமொிக்கா குண்டு வீசித் கொன்றுள்ளது. இதற்கு அமொிக்கா பாதுகாப்பு தலைமையகம் அமொிக்க அதிபர் டொனால் டிரம்ப் உத்தரவிலேயே இத் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமொிக்காவின் இத்தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ஈராக்கில் வைத்து ஈரான் படைத்தளபதி கொல்லப்பட்டதையடுத்து ஈராக்கில் உள்ள அமொிக்கர்களை உடடினயாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு அமொிகக்கா வலியுறுத்தியுள்ளது.

No comments