யேர்மனி கிறீபீல்ட் பூங்காவில் 30 குரங்குகள் தீயில் கருகி உயிரிழப்பு

யேர்மனியில் வெஸ்பாலின் மாகாணத்தில் அமைந்துள்ள கிறீபீல்ட் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் பாராமரிக்கப்பட்ட 30 குரங்குகள் தீயில் கருகி
உயிரிழந்துள்ளன.

இச்சம்பவம் புதுவருடத்தன்று குரங்குகள் சரணாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இங்கே கொரில்லா, சின்பன்சி, ஒரங்குட்டான் எனப் பல வகை இனங்களைச் சேர்ந்த 32 குரங்குகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதில் 30 குரங்குகள் உடல் கருகி உயிரிழந்துள்ளன. மேலும் இரு சின்பன்சிக் குரங்குகள் உயிருடன் மீட்டக்கப்பட்டுள்ளன.

கிறீபீல்ட் உயிரியல் பூங்காவில் கடந்த 1975-ம் ஆண்டு 2000 சதுர மீட்டர் பரப்பளவில் குரங்குகளுக்கான பிரத்யேக சரணாலயம் திறக்கப்பட்டது. இங்கே வருடம் ஒன்றுக்கு 4 இலட்சம் பார்வையாளர்கள் வந்துசெல்லவது குறிப்பிடத்தக்கதது.

ஆங்கிலப் புதுவருடப் பிறப்புக்கு என பொருத்தப்பட்ட மின்விளக்குகளிருந்தே தீப் பிடித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments